Thursday, December 22, 2016

சிரியா அலெப்போ மக்களுக்கான துஆப் பிரார்த்தனையில் சுமார் 1000 பேர்கள் பங்கேற்பு


சிரியா அலெப்போ நகர் யுத்த நகரமாக ஆனதையிட்டு அங்குள்ள மக்கள் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்தும், அகதிகளாகியும் நிர்கதியாகியுள்ளனர். இந்நிலையைக் கவனத்தில் கொண்டு கம்பளை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் கஹட்டபிட்டிய ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகளின் ஏற்பாட்டில் கடந்த 21.12.2016 அன்று புதன்கிழமை இஷாத் தொழுயையடுத்து கஹட்டபிட்டிய ஜும்ஆ மஸ்ஜித் வரவேற்பு மண்டபவத்தில் ஒரு துஆ மஸ்லிஸ் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொது மக்கள், மத்ரஸா மாணவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என சுமார் 1000 பேர்கள் வரை கலந்து கொண்டனர்.