கடந்த 11.02.2017 அன்று கம்பளை மஸ்ஜித்கள் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கம்பளைக் கிளை மற்றும் சம்மேளனத்திற்குரிய செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.சீ.அகார் முஹம்மத், மாவட்டத் தலைவர் அஷ்-ஷைக் எச்.உமர்தீன் உற்பட உலமாக்கள், கொழும்பு கண்டி மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வருகை தந்திருந்த பிரமுகர்கள் மற்றும் உலமாக்கள் சான்றிதழ்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
