எம்மைப் பற்றி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


1924 ம் ஆண்டு இவ்வமைப்பு நிறுவப்பட்ட காலம் முதல் 2000 ம் ஆண்டு பாராளுமன்ற சட்டமூலம் ஒன்று மூலமாக சட்டரீதியாக்கப்பட்டது வரை தனது செயற்பாடுகளை படிப்படியாக விரிவாக்;கி வந்துள்ள ஜமியத்துல் உலமா அமைப்பு,  தற்போது 134 கிளைகள் மற்றும் 5000 திட்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பாரியதொரு ஸ்தாபனமாக வளர்ச்சி அடையந்துள்ளது. செயற்பாட்டு வசதிக்காக ஜமியத்துல் உலமா அமைப்பு 14 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றிட்கான தலைமைத்துவங்களை ஆலிம்கள், துறைசார் நிபுணர்கள், புத்தி ஜீவிகள்  உட்பட்ட சமூக நலனின் அக்கறையுள்ளவர்கள் வழங்கி வருகின்றனர். இவர்களில் பெருமாலானோர் தன்னார்வ அடிப்படையில் தொண்டு புறிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    

ஜமியத்துல் உலமா அமைப்பு பின் 14 குழுக்கள்
1. ஒத்துழைப்பு மற்றும் தொடர்பாடலுக்கான குழு
2. சமூக சேவைக் குழு
3. கல்வி விவகாரக் குழு
4. மக்தப் குழு
5. ஃபத்வா குழு
6. மக்கள் தொடர்பு குழு
7. ஹிலால் (பிறை) குழு
8. ஆய்வு மறறும் பிரசுரக் குழு
9. இளைஞர் விவகாரக் குழு
10. மகளிர் விவகாரக் குழு
11. ஊடகக் குழு
12. இஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதிச் செயற்பாடுகள் குழு
13. உலமாக்கள் விவகாரக் குழு
14. கிளை ஒருங்கிணைப்புக் குழு


ஒத்துழைப்பு மற்றும் தொடர்பாடலுக்கான குழு
சமூகத் தொண்டு மற்றும் மனிதநேயப் பணியில் தனது பாத்திரத்தை மேலும் விரிவாக்கிய வண்ணம் முஸ்லிம்கள் போன்றே முஸ்லிம் அல்லாதவர்கள் இடையே பல நூற்றாண்டு காலமாக இருந்து வரும் நல்லெண்ணத்தையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் இச்சமூகங்கள் இடையே ஒற்றுமை, அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் செயற்பாடுகளில் ஜமியத்துல் உலமா அமைப்பு இடைவிடாது ஈடுபட்டு வருகின்றனது. இதற்காக சர்வ மத கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், செயற்பட்டறைகள் போன்றவற்றை கல்விசாலைகள், பல்கலைக்கழகங்கள், மஸ்ஜிதுகள் உட்பட்ட பல மையங்கள் ஊடாகவும் பிரசுரங்கள், பிரசங்கங்கள், பிரசாரங்கள் மூலமாகவும் ஜமீயா முன்னெடுத்து வருகின்றது. 

இவைகளுடன், மஸ்ஜிதுகளின் பொறுப்பாளர்கள், ஜமீயாவின் உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் தொண்டர்கள், ஆலிம்கள்,  தொழில்சார் விற்பன்னர்கள், அறிவு ஜீவிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோரைக் கொண்ட மஸ்ஜித் மட்ட பிரதிநிதிகள் குழுக்களை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அமைப்பதற்கும் ஜமியத்துல் உலமா அமைப்பு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக அறிவுரைகளை தேவையுடயவர்கள் இக்குழுக்களிடம் இருந்து பெறுவது இவை அமைக்கப்படுவதன் பிரதான குறிக்கோளாகும்.   


சமூக சேவைக் குழு
சிறந்த சமூக மற்றும் கலாசாரத் தரங்கள், சூழல் மற்றும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேம்படுத்துவது இக்குழுவின் குறிக்கோல்களாகும். அத்துடன் மனிதநேய நோக்குடன் முஸ்லிம் போன்றே முஸ்லிமல்லாதவர்களுக்கும் உதவிகளை செய்வதும், நாட்டில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அமைதி, ஒற்றுமை வலுப்பெற பங்களிப்பு செய்வதுடன், நிவாரண மற்றும் புணர்வாழ்வு பணிகளில் ஈடுபடுவதும் இக்குழுவின் செயற்பாடுகளில் நின்றுமுள்ளவையாகும். இவைகளுடன், தற்போது மாதம் ஒன்றிட்கு 250 என கவலைத் தரும் விதத்தில் உயர்வடைந்துள்ள விவாகரத்துக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதும் இக்குழுவின் மற்றுமொரு இலக்காகும். இதற்காக, பிரிவதற்கு எண்ணம் கொண்டுள்ள தம்பதிகளுக்கு துறைசார் பயிற்சி பெற்றவர்கள் மூலம் பரிவுரைகளை வழங்குவதன் மூலம் அவர்களில் மணமாற்றம் ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், அரசு நிர்ணயித்துள்ள வரையறைகளை பேணிய வண்ணம் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து இடர் முகாமைத்துவப் பணிகளிலும் இக்குழு ஈடுபட்டு வருகின்றது. இதற்காக கிளை ரீதியாக தமது உறுப்பினர்களுக்கு பயிற்சிகளையும் ஜமீயா வழங்குகின்றது. அத்துடன் மருத்துவ மற்றும் கல்விக்கான உதவி, சிறைக்கைதிகளுக்கு புணர்வாழ்வளித்தல், சூழல், சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளில் வழிகாகட்டல்களை தரும் பொருட்டு முகாம்களை ஏற்பாடு செய்வதும் இக்குழுவின் பணிகளில் சிலவாகும்.   
  
இதே வேளை, குடும்பங்களில் ஏற்படும் கருத்து வேற்றுமைகள் காரணமாக உருவாகும் பினக்குகளை தீர்த்து ஒற்றுமையை எற்படுத்த தென்னாபிரிக்காவில் பயிற்சி பெற்ற பரிவுரை நிபுணர் குழுவொன்றின் சேவையை இக்குழு பெற்று வருகின்றது. சகல 'காதி' குழுக்களுக்கும் கீழ் இப்பரிவுரையாளர்களை நியமித்து மஸ்ஜித் ஒன்றியங்கள் ஊடாக, முறுகல் ஏற்பட்டுள்ள கணவன் மனைவியிடையே சமாதானத்தை ஏற்படுத்தி சேர்ந்து வாழ அவர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டப்பணி பற்றியும் இக்குழு ஆலோசித்து வருகின்றது. 

கல்வி விவகாரக் குழு 
பாடசாலைகள், பல்கலைக்கழங்கள் மற்றும் மத்ரஸாக்களுக்கு உதவிகளை வழங்குவது இக்குழுவின் முக்கியப் பணியாகும். கல்வியில் பாரிய பின்னடைவை அடைந்துள்ள முஸ்லிம் இளைஞர்களுக்கான ஒரு கல்வித் திட்டத்தை வடிவமைப்பதற்கு இக்குழு தற்சமயம் முக்கியத்துவம் தந்து வருகின்மை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கையில் உள்ள மத்ரஸாக்களில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாடத்திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

மக்தப் குழு
மக்தப் எனும் 'ஆரம்பக் கல்வி' என்ற எண்ணக்கரு இலங்கைக்கு ஒரு புதிய விடயம் அல்ல. 1969 ம் ஆண்டு கல்வி அமைச்சின் பிரசுமொன்றில், கல்வி பற்றிய இஸ்லாமி கண்ணோட்டம் என்ற தலைப்பில் கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸ் எழுதிய ஒரு கட்டுரையில் மக்தப் திட்டத்தை ஒத்த ஒரு கல்வித் திட்டம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது மக்தப் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம், திருக் குர்ஆன் மற்றும் சுன்னா எனப்படும் நபிவழியை கற்பதற்கான ஆர்வத்தை முஸ்லிம் சிறார்களுக்குள் தோற்றுவிப்பதாகும். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டமானது ஜமியத்துல் உலமா அமைப்பு களமிரக்கிய திட்டங்களில் மிகப்பெரியதாகும். இந்த எண்ணக்கரு அடிப்படையிலான கல்வித் திட்டங்கள் பிரிட்டன், தாய்லாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட பல நாடுகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

நம் நாட்டு மத்ரஸாக்கள் பெரும் இக்கட்டில் இருந்தமையை அவதானித்து வந்த ஜமியத்துல் உலமா அமைப்பு மத்ரஸாக்கள் அனைத்திற்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாடத்திட்டத்தை ஏற்படுத்தும் இலக்குடன் 2011 ம் ஆண்டில் இத்திட்டத்தை இங்கு அறிமுகம் செய்தது. இதன் மூலம் திருக் குர்ஆனை தஜ்வீத் சட்டதிட்டங்களின்படி ஓதுதல், குர்ஆனைச் சார்ந்த அரபு மொழி மற்றும் இஸ்லாமிய நல்லொழுக்கங்களை பயிற்றுவித்தல் இதன் நோக்கங்களாகும். 

'மக்தப்' எனும் இச்சிறப்பான கல்வித் திட்டம் இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவில் கல்வி கற்ற ஆலிம்கள் குழுவொன்றே உருவாக்கினர். தற்சமயம் இது 3 படித்தரங்களில் இங்கு கற்பிக்கப்படுவதுடன் இரண்டு ஆண்டுகளில் தற்போதைய பாடவிதானையை கற்பித்து முடித்தவுடன் அது 5 வது படித்தரம் வரை உயர்த்தப்படவுள்ளது. 


ஃபத்வா குழு
இலங்கை முஸ்லிம்கள் முகங்கொடுக்கும் சமூக மற்றும் மார்க்க பிரச்சினைகளுக்கு இஸ்லாமீய ஷரீஆ வழிகாட்டல்களை இலங்கையில் வழங்குவதற்கு அதிகாரமுள்ள ஒரே மார்க்க அமைப்பாகிய ஜமியத்துல் உலமா அமைப்பு, பல்வேறுபட்ட இஸ்லாமிய கல்விசாலைகளின் உலமாக்களின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு இத்துறையில் தமது கடமையை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றது. 

புதிதாக ஏற்படும் மற்றும் குழப்பமான நிலைகளுக்கான எளிமையும் நடைமுறை சாத்தியமுமான மார்க்க தீர்ப்புக்களை இஸ்லாத்தின் கோட்பாடு எல்லைகளை கவனத்தில் கொண்ட வண்ணம் வழங்குவது இக்குழுவின் பணியாகும். இது வரை சமூக, பொருளாதார, சொத்துரிமை, வஸீய்யா உட்பட பல விடயங்கள் தொடர்பாக ஜமியத்துல் உலமா அமைப்பு தீர்ப்புக்ளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொலைபேசி, ஈமேல், தபால் போன்றவை மூலம் மார்க்க தீர்ப்புக்கள் மற்றும் வழிநடத்தல்களை கேட்போருக்கு உலமாக்கள் குழுவொன்று மூலம் இயன்றளவு உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. சிக்கலான விடயங்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றை மாதாந்த உலமாக் கூட்டத்தில் கலந்தாலோசித்து சரியான மற்றும் ஷரீஆ கண்கோட்டத்தில் ஏற்புடைய முடிவுகள் பெறப்படும். தற்போது நாளாந்தம் 15 முதல் 20 வரை விசாரனைகளை ஏற்கப்படுவதோடு, இதுவரை வெளியிடப்பட்டுள்ள தீர்ப்புகள் சுமார் 185 எதிர்கால மேற்கோளுக்காக அறிக்கையிடப்பட்டுள்ளன.       

மக்கள் தொடர்பாடல் குழு
'முஸ்லிம்கள்' என்ற போர்வையில் இருக்கும் வழி தவறிய கூட்டங்கள் மேற்கொள்ளும் தவறான மற்றும் பொய்யான பிரசாரங்களுக்கு மறுப்புரைகளை வெளியிட்ட வண்ணம் முஸ்லிம் மக்களை அவ்வழிகேடுகளில் இருந்து பாதுகாப்பது இக்குழுவின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். அத்துடன், பொது மக்களுக்கும் ஆலிம்களுக்கும் தேவையான வழிநடத்தல்கள் மற்றும் பல்வேறுபட்ட செயற்பாடுகளுக்கான அறிவுரைகளையும் இக்குழு வழங்கி வருகின்றது.    

மஸ்ஜிதுகள்: மஸ்ஜிதுகளை பதிவு செய்தல், சாசனம் (யாப்பு) இயற்றுதல், நம்பிக்கையாளர்கள், இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கான பயிற்சிகளை வழங்குதல்;, பைதுல் மால், ஸகாத், வஸிய்யா, விராஸத், சுத்தம், நிர்வாகம், முஸ்லிமல்லாத அயலவர்களுடன் கலந்துறவாடுதல் போன்ற விடயங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் அறிவுரைகள் போன்றவற்றிட்காக உதவி கோறும் பட்சத்தில் அவற்றையும் இக்குழு வழங்குகின்றது. 


முஸ்லிம் பொது ஜனம்: ஹஜ், ரமழான் காலங்களில் தேவைப்படும் விசேட வழிகாட்டல்கள், அமைதியான குடும்ப வாழ்விட்கான பரிவுரை சேவைகள், தீய பழக்கங்களில் இருந்த விடுபடுவதற்கான அறிவுரைகள் ஆகியவற்றையும் இக்குழு ஜமியத்துல் உலமா அமைப்பு கிளைகள் ஊடாக வழங்கி வருகின்றது.   

ஆலிம்கள்: பயன் மிக்க விதத்தில் ஜுமுஆ பயான்கள் மற்றும் ஏனைய உபதேசங்களை நடாத்துவதற்கான அறிவுரைகள் மற்றும் பயிற்சி, இணையம், தகாஃபுல் எனப்படும் இஸ்லாமிய ஈட்டுறுதி, நிதி மற்றும் வங்கிச் செயற்பாடுகள், கையடக்க தொலைபேசி போன்றவற்றை இஸ்லாமிய வழிகாட்டல்கள் மற்றும் எல்லைகளுக்குள் எவ்வாறு பயன் படுத்துவது என்பது பற்றிய விளக்கங்களை வழங்குவதும் இக்குழுவின் கடமைகளில் உள்ளவையாகும். அதே போன்று, போதை வச்துக்களினால் எற்படக்கூடிய தீமையகளை தெளிவு படுத்தி அதில் இருந்து விடுபடுவதற்கான அறிவுரை மற்றும் புணர்வாழ்வு சேவைகளையும் இக்குழு வழங்கி வருகின்றது.     

வழிகெட்ட கூட்டங்கள்: காதியானி, ஷpயா, பாயிலாவான் போன்ற வழி தவறிப் போன கூட்டங்களின் பொய்யான பிரசாரங்களில் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்கும் நோக்குடன் அவ்வழிகேடர்களுடைய தீய நோக்கங்களை தெளிவு படுத்தும் பணியிலும் இக்குழு ஈடுபட்டு வருகின்றது. இதற்காக மக்கள் மத்தியில் சென்று உழைப்பதற்கு ஆலிம்களை இக்குழு தயார் செய்து வருகின்றது.  

ஹிலால் (பிறை) குழு
சந்திரனின் அடிப்படையில் நாட்களை கணிக்கும் இஸ்லாமிய முறைமையின்படி ஹிஜ்ரி நாளேடுகளை தயார் செய்தல், இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கான தொழுகை நேரங்களை நிர்ணயித்தல், கிப்லா திசையை முடிவு செய்தல் ஆகிய கடமைகளை, குறிப்பிட்ட பிரதேசங்களில் உள்ள மஸ்ஜிதுகளின் ஒத்துழைப்பையும் பெற்று, இக்குழு நிறைவேற்றி வருகின்றது. 

சர்வதேச முறைமைகள் பயன் படுத்தப்பட்டு தேசிய ரீதியிலான உப குழுக்களின் ஒத்துழைப்புடன் ஹிஜ்ரி மாதங்கள் முடிவு செய்யப்படுகின்றன. இதற்காக நாடளாவிய விதத்தில் இருக்கும் ஹிலால் பிரதிநிதிகளின் பங்களிப்பும் ஜமியத்துல் உலமா அமைப்பு கிளைகள் ஊடாக இக்குழுவிட்கு கிடைக்கின்றது. ஹிஜ்ரி மாதங்கள் தொடர்பான அறிவித்தல்களை குறுஞ்செய்திகள் மற்றும் ஈமேல் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் இவை தெடர்பான தகவல்கள் ஜமீயாவின் இணைத்தளத்திலும் வெளியிடப்படுகின்றன. இவை தவிர சூரிய மற்றும் சந்திர கிரகனங்கள் பற்றிய நாட்களும், நேரங்களும் அறிவிக்கப்படுகின்றன. 

இதே வேளை, கிப்லா திசையை முடிவு செய்வதற்கு சூரியனை பயன் படுத்துவது தொடர்பாகவும் இக்குழு கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கான காரணம் நவீன நுட்பங்களை பயன் படுத்தி முடிவு செய்யப்படும் கிப்லா பல சந்தர்ப்பங்களில் தவறானது என காணப்பட்டமையே ஆகும். 

மேற்படி பணிகளை திறம்பட மேற்கொள்வதற்காக பிரதேச செயற்பாட்டாளர்களின் உதவி பெறப்படுவதுடன், அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கவும் ஜமியத்துல் உலமா அமைப்பு முன்னெடுப்புக்களை செய்து வருகின்றது. ஒவ்வொரு இஸ்லாமிய பிறை மாத முடிவிலும் அடுத்த மாதத்திற்கான பிறை தென்படுகின்றதா என்பதை பார்ப்பதற்கு முனையுமாறு சகல முஸ்லிம்களையும் ஊக்குவிப்பதற்கான வழிவகைகளையும் ஜமியா ஆராய்ந்து வருகின்றது. ஒவ்வொரு புதிய மாதமும் நிச்சயமானவுடன் அதை கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஊடாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.   

ஆய்வு மறறும் பிரசுரக் குழு 
அரபி, ஆங்கிளம் உட்பட்ட ஏனைய வெளிநாட்டு மொழிகளில் எழுதப்பட்டுள்ள முக்கியமான இஸ்லாமிய நூற்களை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்வது, சஞ்சிகைகளை பிரசுரிப்பது போன்றே இணைத்தளம் ஊடாக தாவா அழைப்புப் பணியை மேற்கொள்வது இக்குழுவின் முக்கிய பொறுப்புக்களாகும். மேலும், ஜமியத்துல் உலமா அமைப்பின் நூலகங்களை பராமரித்தல் மற்றும் இஸ்லாத்தின் பெயராலேயே இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு மாற்றமாக வெளியிடப்படும் பிரசுரங்கள் தொடர்பாக கண்காணிப்பாக இருத்தல் மற்றும் அது போன்ற முறைகேடுகளுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுத்தல் ஆகியனவும் இக்குழுவின் கடமைகளில் உள்ளவையாகும். இதே வேளை, திர்க்குர்ஆனை சிங்கள மொழியில் வெளியிடும் ஜமீயாவின் செயற்பாடும் பூர்த்தியடைந்து வருகின்றது.  

இளைஞர் விவகாரக் குழு
மாவட்;ட மற்றும் கிளை ரீதியாக இளைஞர் மன்றங்களை அமைப்பதன் மூலம் இக்குழு தமது பணிகளை நிறைவேற்றி வருகின்றது. இளைஞர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதுடன்,  அவற்றிட்கான ஆலோசனைகளை இளைஞர்களிடமும் கோரப்படுகின்றமை இக்குழுவின் விசேட பண்பாகும். தற்காலத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எற்க முடியாத செயல்களின் தீமைகளை விளக்கி அவற்றை நமது இளம் சமுதாயத்திடம் இருந்து முற்றாக ஒழிப்பதற்கு இக்குழு அயராது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மது பானம், போதை வச்து பழக்கங்களில் இருந்து இளைஞர்களை விடுவித்து அவர்களுக்கு புணர்வாழ்வு அழிப்பதற்கு பயிற்சிகளை வழங்குவதும் இக்குழுவின் ஒரு சேவையாகும். அதே போன்று சிறைக்கைதிகளாக இருப்பவர்களுடைய விபரங்களை இக்குழு பெற்று வருவதோடு, அவர்களுக்கு உலகாயுத அடிப்படையிலும் ஆன்மிக ரீதியாகவும் உதவுவதற்கான திட்டங்களை இக்குழு வகுத்து வருகின்றது. இவைகளுடன், இளைஞர்களுக்கு இஸ்லாமிய வாழ்வு முறையை ஊக்குவித்த வண்ணம் அவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளாவன, அவர்கள் திருமணம் செய்ததன் பின் சிறப்பாக குடும்பம் நடத்தவும் துணை புறியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், தமது பிள்ளைகளை ஆலிம்காளகவும், ஹாபிழ்களாகவும் ஆக்குவதற்கான ஊக்கமும் வழங்கப்படவுள்ளன. இதற்காக இளைஞர்களை ஆற்றலூட்ட சிறப்பான கல்வித் திட்டம் ஒன்று இருப்பதன் அவசியத்தையும் இக்குழு இனங்கண்டுள்ளது. ஒவ்வொரு இளைஞருடைய பொதிந்த ஆற்றல்களை அடையாளம் கண்டு அவற்றிற்குப் பொருத்தமான அறிவுகளையும் தொழிற் பயிற்சிகளையும் வழங்கி வேலைவாய்ப்பு வங்கி ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக இளைஞர்களுக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுப்பது இக்குழுவின் இறுதி இலக்காகும்.    

இவை அனைத்துடன், சகவாழ்வு, சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளை வளர்ப்பதட்காக சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு போன்றவற்றை மேம்படுத்தும் விதத்தில், இஸ்லாமிய வரையரைகளையும் கருத்தில் கொண்ட வண்ணம் விளையாட்டு வைபவங்கள், கலாசார நிகழ்ச்சிகள், செயற்பட்டறைகள், கருத்தரங்குகள், உரையாடல் மேடைகள் போன்றவற்றை ஒழுங்கு செய்யவும் இக்குழு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. 

மகளிர் விவகாரக் குழு
மகளிர் தொடர்பான விவகாரங்களை தமது நிரலுக்குள் கொண்டுவருதன் ஜமீயாவின் நோக்கமாவது பல்வேறுபட்ட பாத்திரங்களில் நமது சமூக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து வரும் எமது தாய்மார்களும் சகோதரிகளுமான முஸ்லிம் பெண்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதாகும். குறிப்பாக பெண்களுக்கு ஆன்மிகப் பயிற்சிகளை தருவதற்கான மாதாந்த நிகழ்ச்சிகளை நடாத்தவும், முஸ்லிம் பெண்கள் தொடர்பான விடயங்கள் உட்படுத்தப்பட்ட அறையாண்டு சஞ்சிகை ஒன்றை வெளியிடுவது தொடர்பாகவும் அவ்வாறான நூற்களை அச்சிட்டு வெளியிடுவது பற்றியும் இக்குழு ஆலோசித்து வருகின்றது. இதற்காக ஃபத்வா குழுவின் உதவியும் கோரப்படவுள்ளது. 

இதே வேளை, இலங்கையில் உள்ள முஸ்லிம் மகளிர் பாடசாலைகளை அனைத்தையும் ஒரு வலையமைப்பிட்குள் அமைத்து அவைகளுடன் தொடர்பாடலை மேற்கொள்வதன் ஊடாக அக்கல்வி சாலைகளில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்குத் தேவையான 'தர்பிய்யா' (பயிற்சிகள்) வழங்கும் ஒரு திட்டம் பற்றியும் இக்குழு தீவிரமாக ஆலொசித்த வருகின்றது. இவ்வலையமைப்பிட்கு அரபி கலாசாலைகளின் சங்கங்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. மேலும் பெண்கள் மற்றும் வயதிற்கு வந்த முஸ்லிம் யுவதிகளுக்கு மக்தப் வகுப்புக்களை நடாத்தவும், பெண் ஜனாசா தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவது பற்றிய பயிற்சிகளை பெண்களுக்கு அளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இத்துடன், திருமணம் செய்ய முடிவு செய்துள்ளவர்களுக்கான அறிவுரைகள் வழங்கும் ஒரு திட்டப்பணியை ஆரம்பிக்க இக்குழு  ஆலோசித்து வருவதோடு விவாக விடுதலை கோர எண்;ணியிருக்கும் தம்பதிகளை சந்தித்து பரிவுரைகள் மூலம் அவர்களுடைய முடிவை மாற்ற ஆர்வமூட்டும் சேவை ஒன்று பற்றியும் திட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. இதற்காக உளவியல் பயிற்சி பெற்றுள்ள முஸ்லிம் பெண்களுடைய ஒத்துழைப்பு பெறவும் இக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், உயர் கல்வி கற்றல், மகப்பேறு, சமூக ஊடகம் போன்ற விடயங்களில் இஸ்லாமிய வரையரைகளுக்குட்பட்டு அறிவுருத்தல்களை வழங்கவும் இக்குழு எண்ணியுள்ளது. இதற்கு சமாந்திரமாக, பெண்களுக்கு அன்றாடம் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தொலைபேசி மூலம் வழங்கும் ஒரு சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  

ஊடகக் குழு 
அன்மைக்காலம் முதல் இந்நாட்டு முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு அவசரத் தேவையாக ஆரம்பிக்கப்பட்ட ஜமியத்துல் உலமா அமைப்பின் ஊடகக் குழுவின் பிரதானப் பணிகளாக இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் பொய்யான மற்றும் தவறான கருத்துக்களுக்கான மறுப்புரைகளையும் தெளிவுரைகளையும் வழங்குவது, அதனூடாக சமூகங்களுக்கு மத்தியில் நட்புறவை மீண்டும் உறுதி செய்வது ஆகியன திகழ்கின்றன. இதற்காக அச்சு ஊடகம், இலத்தரனியல் ஊடகம் போன்றே இணையம் ஊடாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிளம் ஆகிய 3 மொழிகளிலும் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ட்விட்டர், வட்ஸெப் போன்ற இணைய நுட்பங்களை விரிவாகப் பயன் படுத்தி வாசகர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளவும் இணையம் ஊடான ஒரு வானொலிச் சேவையை களமிறக்கவும் இக்குழு திட்டமிட்டு வருகின்றது.   

இஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதிச் செயற்பாடுகள் குழு
 இஸ்லாமிய நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கு போன்றே ஸகாத், சதகா, விராசத் (சொத்துரிமை), வஸிய்யா போன்ற வியடங்களில் இலங்கை முஸ்லிம்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவது இக்குழுவின் முக்கிய பணியாகும்.  

பொருளாதரப் பிரச்சினைகள் உள்ள முஸ்லிம்களது தகவல்களை மஸ்ஜித் வாரியாக சேகரித்து, தகுதியுடயவர்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் வாழ்வாதார மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்கவும் இக்குழு செயற்பட்டு வருகின்றது. அத்துடன், குடும்ப நிலை உட்பட்ட பல்வேறுபட்ட நெருக்கடிகளின் காரணமாக கல்வியை தொடார முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கான உதவிகளும், திறமை பொதிந்துள்ளவர்களுக்கான தொழில் நுட்பப் பயிற்சிகளை வழங்கவும் இக்குழு செயற்பட்டு வருக்னிறது. இது போன்ற தேவைகளுக்காக ஸகாத்தை நாடளாவிய விதத்தில் சேகரிப்பது விடயத்தில் இக்குழு தற்போது கவனம் செலுத்தி வருகின்றது. 

மேலும், வஸிய்யா, விராஸத், நிறைவேற்றப்படாத கடன் போன்ற விடயங்கள் தொடர்பான சட்டப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கி வருவது இக்குழுவின் மற்றுமொரு பணியாகும். மரணம் ஒன்று சம்பவித்தவுடன் குறிப்பிட்ட வீட்டிட்குச் சென்று மரணித்தவர் தொடர்பாக மேற்குறிப்பிட்ட விதமான சிக்கல்கள் இருக்கின்றளவா என கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளையும் வழிநடத்தல்களையும் இக்குழு வழங்குகின்றது.  
உலமாக்கள் விவகாரக் குழு
அர்ப்பணிப்புடன் தமது சமூகத்திற்கு சேவையாற்றி வரும் ஆலிம்களின் நலனுக்காக இக்குழு செலாற்றி வருகின்றது. இதனடிப்படையில் கீழ் வரும் சேவைகள் உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன: 

தியாகத்துடனும் தன்னலம் கருதாமலும் சேவையாற்றி வரும் ஆலிம்களை இனங்கண்டு அவர்களை கௌரவித்தல்.
தகைமையும் ஆற்றலும் உள்ள ஆலிம்களை கண்டறிந்து அவர்களுடைய உச்சபட்ச சேவையை சமூகத்திற்கு பெற்றுத் தருதல்.
இஸ்லாமிய உயர் கல்வியைப் பெற ஆர்வமும் ஆற்றலும் உள்ளவர்களை இனங்கண்டு அதற்கான உதவிகளையும் ஊக்கங்களையும் அவர்களுக்கு கொடுத்தல்.
மஸ்ஜிதுகளில் சேவையாற்றும் இமாம்களுடைய வாழ்கைத் தரத்தை மேம்படுத்துதல்.
தேவையான தொழில் நுட்பப் மற்றும் தொழில் பயிற்சிகளை ஆர்வமுள்ள ஆலிம்களுக்கு பெற்றுத் தந்து சுயத்தொழில் வாய்ப்புக்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல். 

கிளை ஒருங்கிணைப்புக் குழு
நாடளாவிய விதத்தில் இருக்கும் ஜமீயாவின் 134 கிளைகள், 114 பிரதேச கிளைகள் மற்றும் 24 மாவட்டக் கிளைகளின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை இக்கிளைக்கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது. பிரதேச கிளைகளின் செயற்பாடுகள் கீழ் காணும் விதத்தில் இருக்கும்:  

கிளைகளின் கட்டமைப்பை மறுசீரமைத்தல் 
பத்வா குழு தவிர்த்த ஏனைய அனைத்துக் குழுக்களுக்கும் பிரதேச செயற்பாடுகள் பற்றிய அறிவுரைகளை வழங்குதல். இது ஜமீயாவின் தலைமை  அலுவலகத்தில் நடைபெறும்.
கிளைகளுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல்
கிளைகளின் செயற்பாடு, அவை மக்களுக்கு வழங்கி வரும் சேவைகளின் தரம் போன்றவற்றை பரசீலித்த வண்ணம் தொடர் கண்காணிப்புக்களை மேற்கொண்டு வருதல் மற்றும் பிரச்சினைகள் இருப்பின் அவற்றிற்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்குதல்.  

No comments:

Post a Comment