சிரியா அலெப்போ நகர் யுத்த நகரமாக ஆனதையிட்டு அங்குள்ள மக்கள் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்தும், அகதிகளாகியும் நிர்கதியாகியுள்ளனர். இந்நிலையைக் கவனத்தில் கொண்டு கம்பளை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் கஹட்டபிட்டிய ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகளின் ஏற்பாட்டில் கடந்த 21.12.2016 அன்று புதன்கிழமை இஷாத் தொழுயையடுத்து கஹட்டபிட்டிய ஜும்ஆ மஸ்ஜித் வரவேற்பு மண்டபவத்தில் ஒரு துஆ மஸ்லிஸ் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொது மக்கள், மத்ரஸா மாணவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என சுமார் 1000 பேர்கள் வரை கலந்து கொண்டனர்.
Thursday, December 22, 2016
Saturday, October 15, 2016
முதலாவது 'யவ்முல் ஜம்இய்யா' வெற்றிகரமாக நடைபெற்றது "அல்ஹம்து லில்லாஹ்"
இன்று அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா கம்பளைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜம்இய்யாவின் 'யவ்முல் ஜம்இய்யா' மஸ்ஜிதை மையப்படுத்திய மாதாந்த பொதுமக்களுக்கான
ஒன்றுகூடல் கம்பளை ஹிஜ்ராகமையில் நடைபெற்றது. காலை 8:00 மணி முதல் அஸர் வரை 'அத்தத்கீர்' மக்கள் சந்திப்பும் அஸர் தொழுகையைத் தொடர்ந்து பொது
பயான் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
Tuesday, October 11, 2016
இம்மாத ஒரு நாள் நிகழ்ச்சி ஹிஜ்ராகமையில்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கம்பளைக் கிளையின் பொது மக்களுக்காக மாதாந்தம் நடாத்தப்படவிருக்கும் நிகழ்ச்சி இம்முறை தல்பிட்டிய ஹிஜ்ராகமையில் நடைபெற இருப்பதாக அதன் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.ரியாஸ் முஹம்மத் நளீமி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது: பிரதி மாதமும் தமது எல்லைக்குற்பட்ட மஸ்ஜித்களில் ஒரு மஸ்ஜிதில் காலத்துக்கும் அவ்வப்பிரதேசங்களுக்கும் தேவையான தலைப்புக்களில் பொது மக்களுக்கு ஆண்கள். பெண்கள் என இரு சாராருக்கும் நிகழ்ச்சிகள் நடாத்த இருப்பதாக அவர் தெரிவித்தார். அதாவது பிரதி மாதமும் குறித்து மஸ்ஜிதுக்கு ஜம்இய்யாவின் உலமாக்கள் காலையிலேயே சென்று அவ்வூர் மக்களைச் சந்தித்து மாலை வரை முயற்சிகள் செய்து அஸர் தொழுகைக்குப் பின் நிகழ்சிகள் முடிந்தவுடன் திரும்புவதே இந்நிகழ்ச்சியின் ஒழுங்காகும் என அவர் மேலும் தெரிவித்தார். இம்மாத நிகழ்ச்சிகள் பின்வருமாறு நடைபெறும்:
(காலம்: 15.10.2016 சனிக்கிழமை நேரம்: 3:45 அஸர் தொழுகையைத் தொடர்ந்து) எனவே பிரதேசத்தின் சகல ஆலிம்களும் சமுகம் தருமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.
உலர் உணவுப் பொதிகள் வினியோகம்
'யுனிட்டி கெயார் செரிட்டபல் ட்ரெஸ்ட்' மற்றும் 'மனித உரிமைகள் அமைப்பு' ஆகிய இரு நிறுவனங்களுடன் கம்பளை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. சுமார் 350 குடும்பங்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன..
மேலதிக செய்திகளுக்கு வீடியோ செய்தி...
மேலதிக செய்திகளுக்கு வீடியோ செய்தி...
Saturday, October 8, 2016
அமைதிப் பேரணியில் கண்டி, கம்பளை ஜம்இய்யத்துல் உலமா
அமைதிப் பேரணியில் கண்டி, கம்பளை ஜம்இய்யத்துல் உலமா
இன்று காலை 10.00 மணியளவில் கம்பளை, குருந்துவத்தை நகர பஸ் தரிப்பிடத்தில் ஒரு அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதனை சர்வமத சமாதான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
அண்மையில் கொழுவல, குருந்துவத்த ஸ்ரீ போதிராஜாராம விஹாராதிபதி அவர்களை சில அரசியல் பின்னனியுள்ளவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அவருடைய ஒரு கை மிகவும் பாதிக்கப்பட்டு கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது:
Monday, September 12, 2016
Tuesday, September 6, 2016
நிவாரண நிதி கையளிப்பு
Subscribe to:
Posts (Atom)





