இன்று அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா கம்பளைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜம்இய்யாவின் 'யவ்முல் ஜம்இய்யா' மஸ்ஜிதை மையப்படுத்திய மாதாந்த பொதுமக்களுக்கான
ஒன்றுகூடல் கம்பளை ஹிஜ்ராகமையில் நடைபெற்றது. காலை 8:00 மணி முதல் அஸர் வரை 'அத்தத்கீர்' மக்கள் சந்திப்பும் அஸர் தொழுகையைத் தொடர்ந்து பொது
பயான் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
முதலில் 'அகீதா எனும் முஸ்லிமின் கொள்கையும், தோண்றியிருக்கும் பிழையான கொள்கைகளும்' என்ற தொணிப் பொருளில் மௌலவி ஸபருல்லாஹ் உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து 'ஹுப்புன் நபி'
கஸீதாவொன்றை ஹாபிழ் அப்துல்
றஹ்மான் பாடி வந்திருந்தோரை உற்சாகமூட்டினார். தொடர்ந்து 'ஈமானும், அஃமாலும்' என்ற தொணிப் பொருளில் சுருக்கமான ஒரு உரை ஜம்இய்யாவின்
தலைவர் அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்தும் உப தலைவர்
மௌலவி நவாஸ் அவர்களால் கூட்டத்தின் நோக்கம் பற்றியும், மனித வாழ்வின் நோக்கம் பற்றியும் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக நன்றியுரையை செயலாளர் அஷ்-ஷைக் ரியாஸ் நளீமி நிகழ்த்தினார். ஊர் மக்கள் சார்பாக
மௌலவி முஹ்ஸின் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. கூட்டம் சுமார் 5:40
மணிக்கு இறையருளால் நிறைவுற்றது.
இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள் அடங்கலாக சுமார்
175 பேர்கள் வரை கலந்து
கொண்டனர். இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற முன்நின்ற செயற்பட்ட சகல ஆலிம்களுக்கும் தமது நன்றியுடன் கூடிய துஆவை ஜம்இய்யாவின் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் மாதத்தின்
'யவ்முல் ஜம்இய்யா'
வும் மாதாந்தக் கூட்டமும்
எதிர்வரும் 05.11.2016 அன்று மு.ப.11.00
மணிக்கு அட்டுவாவத்தை மஸ்ஜிதில்
நடைபெறும் எனவும் முடிவுசெய்யப்பட்டது.




No comments:
Post a Comment