அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கம்பளைக் கிளையின் பொது மக்களுக்காக மாதாந்தம் நடாத்தப்படவிருக்கும் நிகழ்ச்சி இம்முறை தல்பிட்டிய ஹிஜ்ராகமையில் நடைபெற இருப்பதாக அதன் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.ரியாஸ் முஹம்மத் நளீமி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது: பிரதி மாதமும் தமது எல்லைக்குற்பட்ட மஸ்ஜித்களில் ஒரு மஸ்ஜிதில் காலத்துக்கும் அவ்வப்பிரதேசங்களுக்கும் தேவையான தலைப்புக்களில் பொது மக்களுக்கு ஆண்கள். பெண்கள் என இரு சாராருக்கும் நிகழ்ச்சிகள் நடாத்த இருப்பதாக அவர் தெரிவித்தார். அதாவது பிரதி மாதமும் குறித்து மஸ்ஜிதுக்கு ஜம்இய்யாவின் உலமாக்கள் காலையிலேயே சென்று அவ்வூர் மக்களைச் சந்தித்து மாலை வரை முயற்சிகள் செய்து அஸர் தொழுகைக்குப் பின் நிகழ்சிகள் முடிந்தவுடன் திரும்புவதே இந்நிகழ்ச்சியின் ஒழுங்காகும் என அவர் மேலும் தெரிவித்தார். இம்மாத நிகழ்ச்சிகள் பின்வருமாறு நடைபெறும்:
(காலம்: 15.10.2016 சனிக்கிழமை நேரம்: 3:45 அஸர் தொழுகையைத் தொடர்ந்து) எனவே பிரதேசத்தின் சகல ஆலிம்களும் சமுகம் தருமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

No comments:
Post a Comment